ஜாதகத்தில் ராகு கேதுக்கள் பிதுர் தோஷத்தை உண்டாக்குகின்றது. லக்னம், பஞ்சமம், சப்தமம், பாக்கியம் இவ்விடங்களில் ராகு கேதுக்கள் நின்றால் பித்ரு தோஷம் ஏற்படுகின்றது.
பிதுர் தோஷம் தன்னையும், தன் குடும்பத்தையும், குழந்தை சம்பந்தமான பிரச்சினைகளையும் கணவன்-மனைவி சம்பந்தமான பிரச்சினைகளையும் கொடுக்கும். தாய் தந்தை ஊரை ஏமாற்றி பணம் சேர்த்து சொத்து சேர்க்கின்றனர். அந்த பாவம் அவர்களை மட்டுமல்லாமல் அவர்கள் பெற்ற சந்ததியினரை அதாவது அந்த சொத்தை அனுபவிப்பவர்களுக்கும் சேர்கின்றது. இதுதான் பிதுர்தோஷம் பலமான பிதுர் தோஷம் உள்ளவர்கள் காசி அல்லது ராமேசுவரத்தில் வேதம் அறிந்த பண்டிதர்களால் திலா ஹோமம் செய்தால், பிதுர்தோஷங்கள் நீங்கும்.
திலா ஹோமம் எனப்படுவது நெல்லையும் எள்ளையும் கலந்து செய்யப்படும் ஹோமமாகும். காலையில் எள் நீரால் தர்ப்பணத்தை கடற்கரையினில் கொடுத்து விட்டு பின்னரே திலா ஹோமம் செய்யப்பட வேண்டும். திலா ஹோமம் செய்பவர்கள் அன்று இரவு சேத்திரத்தில் தங்கிப்போக வேண்டும்.
No comments:
Post a Comment