பார்வதியின் அம்சமாகத் தோன்றிய தேவகன்னியர் தாமிரபரணி நதிகரைக்கு வந்தனர். தாங்கள் அணிந்திருந்த முத்து மாலைகளை கரையில் வைத்துவிட்டு நீராடினர். குளித்தபின் ஆபரணங்கள் எடுக்க வந்த போது, அவர்கள் குவியலாக வைத்திருந்த நகைகளை எடுக்க முடியவில்லை. எனவே, அவற்றை அப்படியே விட்டுச்சென்றுவிட்டனர். பிற்காலத்தில், இங்கு வந்த பனையடியான் என்ற தொழிலாளி, அதைக்கண்டார். ஆபரணத்தில் தோன்றிய ஒளி, அவரின் கண்களை கூசச்செய்தது. எனவே, அதன் மீது மண்குடத்தை கவிழ்த்து ஒளியை மறைத்து எடுக்க முயற்சித்தார் அப்போதும் பலனில்லை. அன்றிரவில் கனவில் தோன்றிய அம்பிகை, தானே ஆபரணத்தின் வடிவில் இருப்பதாக உணர்த்தினாள். மகிழ்ந்த பனையடியான், இதை மக்களிடம் தெரிவித்தார். பின்பு, அவ்விடத்தில் வழிபாடு தொடங்கியது. தேவகன்னியரின் முத்துமாலையிலிருந்து தோன்றியவள் என்பதால் இவளுக்கு, "முத்துமாலையம்மன்' என்று பெயர் சூட்டப்பட்டது. திருச்செந்தூர் அருகிலுள்ள ஏரலை ஒட்டி இக்கோவில் உள்ளது.
Wednesday, 17 January 2018
ஆபரணத்தில் தோன்றிய அம்பிகை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment