பாலசந்தர் அல்லது பால சந்திரன் என்ற பெயரைக் கேட்டதும், "குழந்தை சந்திரன்' என்று தான் நினைப்போம். ஆனால், இப்பெயர் விநாயகருக்கு உரியது என்கிறார் காஞ்சிப்பெரியவர்.
விநாயகருக்குரிய சோடஷ நாமங்களில் (16 பெயர்) இதுவும் ஒன்று. சமஸ்கிருதத்தில் "பால' என்றால் "நெற்றி'. நெற்றியில் நிலவைச் சூடியிருக்கும் விநாயகரை, "பாலசந்தர்' என்று அழைப்பர். விநாயகரின் உருவம் கண்டு சிரித்த சந்திரனை, அவர் தேய்பிறையாகும்படி சபித்தாலும், பின் மன்னித்து ஏற்றுக் கொண்டார். நிலவைத் தலையில் சூடிக் கொண்டு நடனம் ஆடினார். இதனால் அவருக்கு நிருத்த கணபதி, நர்த்தன கணபதி என்றெல்லாம் பெயர்கள் வந்தன.
No comments:
Post a Comment