இதிஹாஸம் என்றால் "இப்படியாக நடந்தது' என்று பொருள். இதிலுள்ள "ஹ' என்பதற்கு "சத்தியமாக, நிச்சயமாக' என்று அர்த்தம். அதாவது கொஞ்சம் கூட பொய் கலக்காதது. ஆனால், அதன் புனிதத்தை அறியாதவர்கள் தான், பொய் புரட்டு என்றெல்லாம் தவறாகச் சொல்கிறார்கள்.
நாரதரிடம் வால்மீகி, "உலகிலேயே உத்தமான குணம் கொண்டவர் யார்?'' என்று கேட்டார். அதற்கு "ராமன்' என்று பதிலளித்த நாரதர், ராமனின் வரலாற்றை வால்மீகிக்கு கூறினார். அதை வால்மீகி ராமாயண காவியமாக லவகுசர்களுக்கு கற்றுக் கொடுத்தார். அதை அவர்கள் ராமனின் முன்னிலையில் பாடினார். இதுபோல, மகாபாரதத்தை பாண்டவர்களின் கொள்ளுப்பேரனான ஜன்மேஜயனுக்கு, வைசம்பாயன முனிவர் கூறினார். அதை வியாசர் ஸ்லோகங்களாக மாற்ற, விநாயகர் தன் தந்தத்தால் எழுதினார்.
No comments:
Post a Comment