எட்டுக்குடி முருகன் கோவில், திருத்துறைப்பூண்டியிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் உள்ளது. இங்கு, மயில் மீதிருக்கும் முருகனைப் பற்றிய கதை ஒன்று உண்டு. சோழ மன்னனுக்கு உட்பட்ட குறுநில மன்னன் முத்தரையன், முருகன் சிலை வடிக்க விரும்பி, ஒரு சிற்பியிடம் பணியை ஒப்படைத்தான். ஆறுமுகத்துடன் கூடிய முருகனை மயிலில் அமர்ந்த நிலையில் சிற்பி உருவாக்கினார். அந்தச் சிலையின் உடலில் வியர்வையும், உஷ்ணமும் உண்டாயிற்று. மயிலின் கண்களைத் திறந்தபோது, மயில் பறக்க முயன்றது. அந்தளவு தத்ரூபமாகவும் சக்தி மிக்கதாகவும் சிலை அமைந்தது. இதையறிந்து, அங்கு வந்த மன்னன், சிற்பியிடம் மயிலின் நகத்தை சிறிது உடைக்கச் சொன்னான். சிற்பியும், அப்படியே செய்யவே மயில் பறக்க முடியாமல் பூமியில் நிலைகொண்டது. இங்கு மயில் குபேர திசையான வடக்கு நோக்கி திரும்பியிருப்பது சிறப்பானது.
Thursday, 18 January 2018
கண் திறந்தது மயில் பறந்தது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment