Wednesday, 10 January 2018

நல்லதா நாலு வார்த்தை


அசோகவனத்தில் ஒருநாள் சீதையின் காதருகில் வண்டு ஒன்று ரீங்காரம் இட்டது. இதைக் கண்ட விபீஷணனின் மகளான திரிஷடை, ""அம்மா! அந்த வண்டு உங்கள் காதருகே வந்து ஏதாவது நல்ல சேதி சொன்னதா! என்னைப் பொறுத்தவரை, உங்களுக்கு விடிவு காலம் நெருங்கி விட்டது,'' என்றாள். இதைக்கேட்டு சீதை மகிழ்ந்தாள். துன்பத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதலாக நாலு வார்த்தை சொன்னால் அவர்களின் மனதில் நம்பிக்கை துளிர்விடும்.

No comments:

Post a Comment