Wednesday, 10 January 2018

ராமனின் இன்னொரு அம்மா


ராமாவதாரம் ராவண வதத்திற்காக நிகழ்ந்தது என்பர். ஆனால், உண்மையில் ராமன் இந்த பூமியில் அவதரிக்க காரணமாக இருந்தவர்கள் கவுதமரும், அகலிகையும் தான். சந்தர்ப்ப சூழலால் மனைவியைக் "கல்லாகப் போ' என்ற சபித்த கவுதமர், அதற்கு விமோசனமாக "பகவான் நாராயணன் ராமாவதாரம் எடுத்து பூமிக்கு வருவார். அவரது பாதம் எப்போது உன் மீது படுகிறதோ அப்போது சுயவடிவம் பெறுவாய்,'' என்றார். 

அதன்படி ராமனின் பாதம் பட்டதும் சுயவடிவம் பெற்றாள். தன்னுடன் வந்த விஸ்வாமித்திரரிடம், ""இந்த அன்னைக்கு ஏன் இக்கதி நேர்ந்தது?'' என்று கேட்டார். பெற்றவளான கோசலையை மட்டுமல்ல! அகலிகையையும் "அம்மா' என்று அழைத்து அவளுக்கு பெருமை சேர்த்தார். 

No comments:

Post a Comment