Thursday 18 January 2018

ஒருநாள் தங்கினால் மோட்சம் போகலாம்


திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருக்கண்ணமங்கையில் பத்தராவி பெருமாள் கோவில் உள்ளது. விமானம், ஆரண்யம் (காடு), மண்டபம், தீர்த்தம், ஷேத்திரம், நதி, நகரம் என்னும் ஏழு லட்சணம் பெற்ற தலம் என்பதால், இதை "சப்த புண்ணிய தலம்' என்பர். இங்கு தேவர்கள் தேனீக்கள் வடிவில் வந்து பெருமாளை வணங்கினர். இதைக் குறிக்கும் வகையில், தாயார் சன்னிதியின் வடபுறத்தில் இப்போதும் தேன்கூடு உள்ளது. "ஓம் நமோ நாராயணாய நம' என்னும் எட்டெழுத்து மந்திரத்தை உபதேசம் பெற்று ஜபிப்பவர்கள் மோட்சம் பெறுவர் என்பது ஐதீகம். ஆனால், இந்த மந்திரசித்தி பெறாமலேயே, மோட்சம் பெற நினைத்தால், ஒருநாள் இங்கு தங்கி பெருமாளை வழிபட்டால் போதும் என தல வரலாறு கூறுகிறது.

No comments:

Post a Comment