
விஷ்ணுவின் ராமாவதாரத்தில், அவருக்கு சாமான்ய மனிதனைப் போல இரண்டு கைகள் மட்டுமே இருந்தன. அதில் வில், அம்பு தாங்கியிருந்தார். ஆனால், பொன்பதர்கூடம் என்ற ஊரில் நான்கு கரங்கள் கொண்ட ராமர் சிலை உள்ளது. செங்கல்பட்டில் இருந்து 13 கி.மீ., தொலைவிலுள்ள இத்தலத்திற்கு "சதுர்ராமம்' என்றும் பெயருண்டு. "நான்கு கரங்களுடன் ராமர் இருக்குமிடம்' என்பது இதன் பொருள். மேல் இரு கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தியும், கீழ் இரு கைகளில் அபய, வரத முத்திரை காட்டியும் நிற்கிறார். வலப்புறத்தில் சீதையும், இடப்புறத்தில் லட்சுமணரும், எதிரில் அனுமன் வாய் பொத்திய நிலையிலும் உள்ளனர். தேவராஜன் என்ற முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்கி, ராமர் பெருமாளுக்குரிய அம்சத்துடன் நான்கு கரங்களுடன் காட்சியளித்ததாக தலபுராணம் கூறுகிறது.
No comments:
Post a Comment