
தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடந்த போது வலம்புரிச் சங்கு வெளி வந்தது. மகாவிஷ்ணு அதை தன் இடதுகரத்தில் தாங்கிக் கொண்டார் என்கிறது விஷ்ணு புராணம். சங்கு லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. ஐஸ்வர்யம், மங்கலம், வீரம் ஆகியவற்றின் சின்னமாக விளங்கும் சங்கினை பழங்காலத்தில் "நத்தார் படை' என்று குறிப்பிட்டனர். கோயில்களில் வலம்புரிச்சங்கில் நீர் விட்டு, கும்பத்தின் மேல் வைத்து பூக்களால் அர்ச்சித்த பின், சுவாமிக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். சங்கில் விடும் சாதாரண நீரும் கூட புனித தீர்த்தமாகி விடும் என்பது ஐதீகம். சங்கில் செல்வத்திற்கு அதிபதியான குபேரன் உள்ளிட்ட எல்லா தேவதைகளும் வாசம் செய்கின்றனர். வங்காளிப் பெண்கள், திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் சங்கு வளையல் அணிவதை புனிதமாகக் கருதுகின்றனர்.
No comments:
Post a Comment