Sunday 7 January 2018

சங்கடம் தீர்க்கும் சரபர்

Image result for sarabeswarar

இரண்யனைச் சம்ஹாரம் செய்வதற்காக திருமால் நரசிம்மராக அவதரித்தார். நகங்களால் அசுரனின் உடலைக் கிழித்து உக்கிர கோலத்தில் காட்சியளித்தார். அவரைச் சாந்தப்படுத்தும்படி சிவனிடம் தேவர்கள் முறையிட்டனர். யாளி, பறவை, மனித முகம் என மூன்றும் கலந்த அபூர்வ தோற்றத்துடன் சரபேஸ்வரராக சிவன் எழுந்தருளினார். தன் இரு இறக்கைகளால் வீசி நரசிம்மரைக் குளிர்வித்தார். தேவர்களும், முனிவர்களும் ஒன்று கூடி அரியாகிய நரசிம்மரையும், அரனாகிய சரபேஸ்வரரையும் மலர்மாரி பொழிந்து வழிபட்டனர். சுவாதி, திருவாதிரை, அஷ்டமி நாட்களிலும், வெள்ளி, ஞாயிறன்று ராகு வேளையிலும் சரபேஸ்வரருக்கு நாட்டுச் சர்க்கரை படைத்து வழிபட்டால் மகிழ்ச்சி நிலைக்கும்.

No comments:

Post a Comment