Sunday, 21 January 2018

திருமணத்தடை நீக்கும் கொங்கண சித்தர்

திருமணத்தடை நீக்கும் கொங்கண சித்தர்

கொங்கணர் கேது கிரகத்தைப் பிரதிபலிப்பவர் ஆகையால் ஜாதக கேது தோஷங்கள் விலகி நன்மை பயக்கும். திருமணத்தடை மற்றும் களத்திர தோஷம் நீங்கி திருமணம் நல்ல முறையில் நடக்கும்.

கொங்கணர், போகரின் மாணாக்கர். இவர் தவத்தில் ஆழ்ந் திருக்கும்போது, மரக்கிளையில் இருந்த கொக்கு எச்சமிட, அதனால் தவம் கலைந்து, கோபமுடன் சித்தர் நோக்க, கொக்கு எரிந்து சாம்ப லானது. பிறகு, நீண்டநாள் தவத்திலிருந்து கலைந்தமையால் ஆகாரம் உண்ண ஒரு வீட்டிற்குச் சென்று உணவு கேட்டார். அவ்வீட்டிலிருந்த அம்மையார் காலந்தாழ்த்தி அன்னமளித்தார். 

சித்தர், அந்த அம்மையாரை, சினந்து நோக்கினார். உடனே, அம்மையார், ‘கொங்கணவா நான் ஒன்றும் கொக்கல்ல எரிந்து போவதற்கு’ என்று அமைதியாகப் பதில் அளித்தார். ‘என் கணவருக்கான பணிவிடையில் இருந்த போது உமது குரல் கேட்டது. ஆனால் எனது கடமையை முடிக்காமல் நான் எப்படி உமக்கு அன்னமளிக்க வரமுடியும்’ என்றார் அவர். 

கொங்கணர், அந்த பெண்மணியின் தொலைவில் உணர்தலை (ஞானதிருஷ்டி) எண்ணி வியந்தார். அவளுடைய கற்பின் திண்மையை மெச்சி வாழ்த்தினார். தம்முடைய சினத்தை நினைத்து வெட்கினார். போகரின் கருத்துப்படி திருமாளிகைத்தேவரிடம் சென்று சமய தீட்சை, நிர்வாண தீட்சை பெற்றார் என்ற குறிப்பு போகர் ஏழாயிரத்தில் காணப்படுகிறது. இவர் திருவேங்கடத்தில் யோக சமாதியில் அமர்ந்தார் என்பர். கொங்கணர் வாத காவியம் பல வேதியியல் ரகசியங்களைப் பெற்றுள்ளது.

கொங்கண சித்தருக்கான பூசை முறைகள்: அகப்புறத் தூய்மையுடன் பூஜையைத் துவக்க வேண்டும். அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகிக் கோலமிட்டு, எட்டு பக்கங்களிலும் சந்தனமும், குங்குமமும் இடவேண்டும். அப் பலகை மீது கொங்கணரின் உருவப்படத்தை வைக்க வேண்டும். சுத்தமாக விளக்கிய குத்து விளக் கிற்கு மஞ்சள், குங்குமம் மலரிட்டு அலங்கரித்து முக்கூட்டு எண்ணெய் தீபமேற்றி பூசையைத் துவங்க வேண்டும். முதலில் தியானச் செய்யுளை சொல்லி பக்தியுடன் வணங்கவேண்டும். பின்பு வில்வம், சாமந்தி, அரளி ஆகியவற்றால் 16 போற்றிகளைச் சொல்லிக் கொண்டே அர்ச்சிக்க வேண்டும்.

முறைப்படி இவரை வழிபட்டால் :

1. மனவளர்ச்சி அபிவிருத்தி ஏற்படும். 2. கேது பகவானின் தோசம் நீங்கி களத்திர தோசம் இன்றி திருமணம் நல்ல முறையில் நடக்கும். 3. தியானம் கைகூடும். 4. சகவாச தோசம் நீங்கும். 5. தீய பழக்கங்கள் விலகும். 6. ஞாபக சக்தி உண்டாகும். 7. உறவினர் களின் பலம் உண்டாகும். 8. முன் கோபம் உள்ளவர்கள் சாந்த சொரூபிகளாவர்கள். இவருக்கு மஞ்சள், அல்லது சிவப்பு வர்ணங்கள் உடையை வைத்து அல்லது அணிவித்து பூஜை செய்யலாம். வழிபட சிறந்த நாள் வெள்ளிக்கிழமை.

கொங்கணர், தம் வாழ்நாளில் கௌதமர், போகர், திருமாளிசைத் தேவர், திருமழிசையாழ்வார் என்று பல சான்றோர்களை தரிசித்து, பலவிதங்களில் ஞானம் பெற்றதை அறிய முடிகிறது. தஞ்சையில் பிரத்யேகமாக ஒரு சிவலிங்கத்தை தனது பூஜைக்கென்றே உருவாக்கி, இறுதிவரை பூஜித்து வந்ததாகவும் தெரிகிறது. அபிதான சிந்தாமணி, இவரை அகத்தியரின் மாணாக்கர் என்கிறது. 

இவர் எழுதிய நூல்கள் கொங்கணர் கடைக்காண்டம், ஞானம், குளிகை, திரிகாண்டம் ஆகியவையாகும். கொங்கணர் கேது கிரகத்தைப் பிரதிபலிப்பவர் ஆகையால் ஜாதக கேது தோஷங்கள் விலகி நன்மை பயக்கும். திருமணத்தடை மற்றும் களத்திர தோஷம் நீங்கி திருமணம் நல்ல முறையில் நடக்கும். போதைப் பொருள்களுக்கு அடிமை ஆகுதல், புகை பிடித்தல், குடிப்பழக்கம் நீங்கும். ஆன்மீக எண்னங்கள் தோன்றும். உறவினர்களின் பலம் உண்டாகும். ஞாபக சக்தி அதிகமாகும். சகவாச தோஷம் நீங்கும். மன வளர்ச்சி அபிவிருத்தி அடையும்.

கொங்கண சித்தர் திருமலையில் ஏழுமலையான் அருள்பாலிக்கும் ஆலயத்துக்குள்ளேயே இருப்பதாக சிலர் சொல்கிறார்கள்-. ஆனால் திருமலையில் உள்ள வராக குளத்தின் தெற்கு பகுதியில் எட்டாம் படிக்கட்டில் அவர் அடங்கி இருப்பதாக சிலர் எழுதியுள்ளனர்.

திருமலையில் உள்ள எட்டாவது மலையில்தான் பாபாஜி என்ற பக்தருடன் பெருமாள் சொக்கட்டன் ஆடியதாக சொல்வார்கள். அவர்கள் சொக்கட்டன் ஆடிய இடத்தில் கொங் கண சித்தர் ஜீவசமாதி இருப்ப தாக சில நூல்களில் குறிப்பு உள்ளது. அந்த ஜீவ சமாதி மீது ஒரு மரம் வளர்ந்துள்ளது. அந்த மரத்தின் இலையை பக்தர்கள் பொக்கிஷமாக கருது கிறார்கள். அதை வைத்து கொங் கணரை போற்றி வழிபடுவதும் உண்டு.

கொங்கணருக்கு செய்யும் வழிபாடு ஏழுமலையான் அருளை பரிபூரணமாகப் பெற்றுத்தரும் என்று சொல்கிறார்கள். சொங்கணரை வழிபட 8-வது மலைக்கு ஜீப்பில் சென்றுவர வசதி உள்ளதாம். திருப்பதி செல்பவர்கள் விசாரித்து தெரிந்து கொள்ளவும்.

சிலைக்கு ஈர்ப்பு :

தன்னுடைய பிராணப் பிரதிஷ்டையால் திருப்பதி ஏழுமலையான் சிலைக்கு ஆக்கினை நெற்றி, தொண்டையில் விசுத்தி, மார்பில் அனாகதம் என்ற 3 சக்கரங்களையும் கொங்கணச்சித்தர் திறந்து வைத்துள்ளபடியால்தான் அந்த சிலைக்கு அவ்வளவு ஈர்ப்பு உள்ளது.

தவம் செய்த இடங்கள் :

தாராபுரம் காங்கேயம் ரோடு, ஊதியூர் மலை கொங்கணர் குகை, கோவை-சேலம் மெயின் ரோடு சங்ககிரி அருகாமை சூரியவனம் கொங்கணர் குகை, திருப்பூர் கொங்கணகிரிமலை போன்றவை கொங்கணர் தவம் செய்த இடங்களாகும்.

No comments:

Post a Comment