Sunday, 21 January 2018

வேலையில் பிரச்னைகள் நீங்குவதற்கு எளியப் பரிகாரம்

angry-woman

ஒருவருடைய ஜாதகத்தில் வேலை சம்பந்தமான பிரச்னைகள் ஏற்பட்டால் அவருக்கு கோச்சார ரீதியாக கிரகநிலைகளும் - திசை ரீதியாகவும் சரி இல்லை எனப் பொருள் கொள்ள முடியும்.

என்ன திசை நடக்கிறதோ அதற்கேற்றார் போல் பரிகாரம் செய்து கொள்ளுதல் அவசியம். கோச்சார ரீதியாகவும் கிரக நிலைகளை அனுசரித்து பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது.

உதாரணமாக ரோகிணி நக்ஷத்ரம் - ரிஷப ராசிக்காரர் என்பதை எடுத்துக் கொள்வோம். 40 வயது என எடுத்துக் கொள்வோம். அவருக்கு திசா ரீதியாக குரு திசை நடக்கலாம். குரு என்பவர் ராசிக்கு அஷ்டமாதிபதி தற்போது அவருக்கு அஷ்டமத்து சனி நடக்கிறது. அவருடைய ஜெனன கால ஜாதகத்தில் குரு ரிஷபத்திலோ அல்லது மிதுனத்திலோ இருந்திருக்கலாம். தற்போதைய நிலை இந்த ஜாதகருக்கு வேலையில் மிக அதிக பளு ஏற்படும்.

இதற்கு அவர் செய்ய வேண்டியது தினமும் சித்தர்களை வணங்குவது நன்மையைத் தரும். முன்னோர்களை வணங்கி வழிபடுவதும் மிக அதிக நன்மைகளைக் கொடுக்கும்.

ஒவ்வொரு திசைக்கு ஏற்றப் பரிகாரங்கள் :

கேது - விநாயகர்

சுக்கிரன் - மஹாலக்ஷ்மி

சூரியன் - சிவன், நரசிம்மர்

சந்திரன் - அம்மன்

செவ்வாய் - முருகன், கிருஷ்ணர், வாராகி

ராகு - துர்க்கை, நாகதேவதை, நாகாத்தம்மன்

குரு - சித்தர்கள், ஜீவசமாதிகள்

சனி - முன்னோர்கள், காவல் தெய்வங்கள், ஐயப்பன்

புதன் - பெருமாள், ஆஞ்சநேயர், விநாயகர், முருகன்

No comments:

Post a Comment