Monday, 15 January 2018

சபாஷ் சரியான தீர்ப்பு


இல்லறம், துறவறம் இரண்டில் எது சிறந்தது என்ற வாதம் நிகழ்ந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தாயுமானவர் அவர்களிடம், "ஆட்டுபவன் இல்லாமல் பம்பரம் தானாக ஆடாது. அதுபோல, அண்டம் அனைத்தையும் ஆட்டுவிப்பவன் இறைவன். ஒரு மனிதன் இல்லறத்தில் ஈடுபட்டாலும், துறவறத்தில் ஈடுபட்டாலும் "நான்' என்ற ஆணவம் கொள்ளக்கூடாது. "எல்லாம் அவன் செயல்' என்ற எண்ணத்துடன் அடங்கி வாழ்ந்தால் இல்லறமும் சிறந்தது. துறவறமும் சிறந்தது. இல்லாவிட்டால் இரண்டுமே தாழ்ந்தது தான்,'' என்று தீர்ப்பளித்தார். இவர் பாடிய பராபரக் கண்ணியில், எல்லா உயிர்களும் இறையருளால் இன்புற்று வாழ வேண்டும் என வேண்டுகிறார்.

No comments:

Post a Comment