Monday, 15 January 2018

வாயை மூடினால் நல்லது


வழவழவென்று பேசுபவர்களை "வாயை கொஞ்ச நேரம் மூடக்கூடாதா?' என்பார்கள். பேச்சைக் குறைத்தால் பிராணவாயு சேமிக்கப்பட்டு ஆயுள் கூடும். வாயை உம்மென்று வைக்க வேண்டும் என்பதற்காகத் தான் "ஓம்' "ராம' ஆகிய மந்திரங்கள் பிறந்தது. "ராம' என்றால் பாவம் போக்குவது, செல்வ வளம் தருவது, மகிழ்ச்சி அளிப்பது என்று பொருள்கள் உண்டு. "ராம' என்னும் இரண்டெழுத்தில் "ரா' என்று சொல்லும் போது வாய் திறக்கும். அப்போது பாவம் போய் விடும், "ம' என்று சொல்லும் போது உதடுகள் சேர்ந்து விடும். மீண்டும் பாவ எண்ணம் நெருங்காமல் தடுக்கும். இதனால் தான் "ராம' மந்திரம் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. ஓம் என்னும் போதும் இதே போல வாய் திறந்து மூடிக்கொள்ளும்.

No comments:

Post a Comment