Tuesday, 9 January 2018

நீதி தெய்வம்


காளி வழிபாடு பழமையானது. சங்க காலத்தில் பாலை நில மக்கள் கொற்றவை என்னும் பெயரில் காளியை வழிபட்டனர். கிராமங்களில் செல்லியம்மன், எல்லையம்மன், பிடாரியம்மன், வடக்குவாசல் செல்வி என்றெல்லாம் காளி வழிபடப்படுகிறாள். நாடு முழுவதும் வெவ்வேறு பெயர்களும், வடிவமும் கொண்டவளாக இவள் திகழ்கிறாள். காஷ்மீரில் வைஷ்ணவி, ராஜஸ்தானில் பவானி, வங்காளத்தில் காளி, கர்நாடகத்தில் சாமுண்டி, கேரளத்தில் பகவதி என்ற பெயர்கள் இவளுக்கு வழங்கப்படுகிறது. நீதிதெய்வமான காளியை வழிபட்டால் நியாயம் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. 

No comments:

Post a Comment