Tuesday, 9 January 2018

நிரந்தர வெற்றிக்கு வழி


போர்க்களத்தில் தம்பி கும்பகர்ணன், மகன் இந்திரஜித் ஆகியோரை இழந்த ராவணன், ராமனைப் பழி வாங்கத் துடித்தான். "இனி யாரையும் நம்ப மாட்டேன்; நானே நேருக்கு நேர் மோதி ராமனை வெல்வேன்'' என்று சபதம் செய்தான். "யுத்த ரதம்' என்னும் கவசமிட்டு ஆயுதங்களுடன் தேரில் போர்க்களம் சென்றான். ராமரோ பாதரட்சை (காலணி) கூட இல்லாமல் வில் மட்டும் ஏந்திச் சென்றார். அப்போது விபீஷணன், ""வெறும் வில்லேந்திச் செல்லும் உங்களால் ராவணனை வெல்ல முடியுமா?'' என்று கேட்டான். அப்போது ராமர் விபீஷணனைத் தைரியப்படுத்த சொன்ன உபதேசமே "ராம கீதை'.

"உடல் வலிமை, ஆயுதம் ஆகியவற்றால் கிடைக்கும் வெற்றி தற்காலிகமானது. நேர்மை, தர்மம் போன்ற உயரிய பண்புகளே மனிதனுக்குரிய ஆயுதங்கள். இதுவே நிரந்தர வெற்றி தரும்,'' என்பதே ராமகீதையின் கருப்பொருள். ராமகீதையை துளசிதாசர் எழுதிய துளசி ராமாயணத்தின் யுத்த காண்டத்தில் ராமகீதையை படிக்கலாம்.

No comments:

Post a Comment