Saturday 6 January 2018

அடிக்கடி பெயர் மாற்றுபவர்


வேதத்தில் சூரிய வழிபாடு பற்றிய குறிப்புகள் பல உள்ளன. "எல்லாத் தீங்குகளில் இருந்தும் மீட்டு நல்லருள் புரிவாயாக' என சூரியதேவனை ரிக் வேதம் வேண்டுகிறது. கிருஷ்ணரின் புதல்வனான சாம்பனுக்கு நாரதர் சொன்னதே சூரியபுராணம். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில் புரியும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோருக்கே சூரியன் தான் தலைவர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சூரியனுக்கு மாதம் ஒரு பெயர் மாறும். சித்திரையில் அம்சுமான், வைகாசியில் தாதா, ஆனியில் இந்திரன், ஆடியில் ரவி, ஆவணியில் கபஸ்தி, புரட்டாசியில் யமன், ஐப்பசியில் சுவர்ணரேதஸ், கார்த்திகையில் துவஷ்டா, மார்கழியில் மித்திரன், தையில் விஷ்ணு, மாசியில் அருணன், பங்குனியில் சூரியன் என 12 பெயர்கள் இருக்கின்றன. அகத்தியரால் ராம பிரானுக்கு உபதேசிக்கப்பட்ட ஆதித்ய ஹ்ருதய மந்திரத்தை ஞாயிற்றுக் கிழமை, சப்தமி திதிகளில் படித்தால் எதிரி பயம் நீங்கி வெற்றி உண்டாகும்.

No comments:

Post a Comment