Saturday 6 January 2018

ஆன்மிக யோகம் வேண்டுமா ?


சூரியனுக்கு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சூரியனார் கோயில் உள்ளது. ஆடுதுறையில் இருந்து 4கி.மீ., தொலைவிலுள்ள இக்கோயில் முதலாம் குலோத்துங்க சோழ மன்னனால் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. உஷா,பிரத்யுஷா என்னும் இருதேவியுடன் கருவறையில் மூலவர் சிவசூரியன் காட்சியளிக்கிறார். சூரியன் தவிர மற்ற கிரகங்களுக்கும் தனித்தனி சந்நிதி உள்ளது. சூரியனின் உக்கிர பார்வையைக் குறைக்கும் விதத்தில் குருபகவான் கருவறை எதிரில் இருக்கிறார். சூரியனையும், குருவையும் ஒருசேர தரிசித்தால் ஆன்மிகயோகம் உண்டாகும். சிவாகம முறைப்படி கட்டப்பட்டுள்ள இங்கு கோள் தீர்த்த விநாயகர், காசி விஸ்வநாதர், விசாலட்சி சந்நிதிகளும் உள்ளன.

சூரிய விரதம் : சூரியனுக்குரிய விரதங்களில் முக்கியமானது ரத சப்தமி. தை அமாவாசையைத் தொடர்ந்து வரும் வளர்பிறை சப்தமிநாளில் கொண்டாடப்படும். அன்று ஏழைகளுக்கு குடை, செருப்பு தானம் அளிப்பர்.

No comments:

Post a Comment