ரிக், யஜூர், சாம, அதர்வணம் என வேதங்கள் நான்காகும். இதில் அதர்வண வேதம் பிற்காலத்தில் வந்தது என்பதால், அதை ஒதுக்கிவிட்டு மூன்றாகவே எடுத்துக் கொள்வர். இதில் நடுவில் உள்ளது யஜூர் வேதம். இது ஏழு காண்டங்களைக் கொண்டது. இவற்றில் நடுநாயகமாக விளங்குவது நான்காவது காண்டம். இது இறைவனின் இதயக் கமலமாக போற்றப்படுகிறது. இந்தக் காண்டத்தின் நடுவில் சிவபெருமானை துதிக்கும் "நமகம்' எனப்படும் "ஸ்ரீருத்ரம்' அமைந்துள்ளது.
இந்த ருத்ரத்தின் நடுவில் மகாமந்திரமான "நமசிவாய' என்னும் பஞ்சாட்சரம் அமைந்துள்ளது. சிவாய நம என்றும் சொல்வர். இந்த மந்திரத்தை அபாயம் நீக்கும் வழியாக அவ்வையார் தம் பாடலில் குறிப்பிடுகிறார். ஞானசம்பந்தப் பெருமானும் "நற்றுணை யாவது நமச்சிவாயவே' என்று குறிப்பிடுவதைக் காணலாம். மாணிக்கவாசகரின் நூலான திருவாசகத்திலுள்ள சிவபுராணத்தை ஓதும் பக்தர்கள் "நமச்சிவாய வாழ்க' என்ற பஞ்சாட்சர மந்திரத்தை போற்றி தொடங்குவர்.
No comments:
Post a Comment