லட்சுமி பலவிதமான பொருள்களில் வாசம் செய்தாலும் விளக்கொளியில் அவள் தீபலட்சுமியாக காட்சி தருகிறாள். தீபமேற்றும் நேரம் என்றாலே மாலைப்பொழுது தான் என எண்ணுகிறோம். அதிகாலை வேளையில் ஏற்றும் தீபமும் சிறந்த பலன் தரும். பிரம்மமுகூர்த்தம் என்னும் அதிகாலைப் பொழுதில் எழுந்து நீராடினால் உள்ளமும் உடலும் தூய்மை பெறும். காலையில், மாணவர்கள் வீட்டில் நெய் தீபம் ஏற்றி சுவாமியை தெரிந்த ஸ்லோகங்கள், பாடல்கள் சொல்லி வணங்கினால் நல்லறிவும், ஞாபக சக்தியும் பெறலாம். பெரியவர்கள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றினால் மனநிம்மதி கிடைக்கும். பயம் நீங்கும். தீபமேற்றும் திசையை பொறுத்து தனித்தனி விசேஷ பலன் உண்டாகும். கிழக்கு நோக்கி ஏற்ற ஆயுள் அபிவிருத்தி, மேற்கில் ஏற்ற சகோதர உறவு பலப்படும், வடக்கு நோக்கி ஏற்ற திருமணத்தடை நீங்கும், லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
Friday, 5 January 2018
காலையில் விளக்கேற்றும் பலன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment