Thursday, 11 January 2018

நாக்கு மாதிரி இருங்க


இலங்கை மன்னனாக முடிசூடிய விபீஷணனிடம் அனுமன்,"தர்ம வழியில் வாழ விரும்பும் நீ, இத்தனை காலம் எப்படி ராவணனோடு இருந்தாய்?'' என்று கேட்டார். அதற்கு விபீஷணன்,"மனதில் உறுதி இருந்தால், சூழ்நிலை ஒருவரைப் பாதிப்பதில்லை. நாக்கு மென்மையானது. அதைச் சுற்றியுள்ள 32 பற்களும் கடினமானவை. நாக்கில் உணவு விழுந்ததும், சுற்றியுள்ள பற்கள் கடிக்கவும், அரைக்கவும் செய்கின்றன. ஆனாலும், அவற்றுக்கு இடையே கடிபடாமல் இருக்கும் நாக்கு போல நானிருந்தேன்,'' என்றான் விபீஷணன். நீங்க எப்படி? கெட்ட பழக்கங்கள் பல நம்மைச் சுற்றி இருந்தாலும் அவற்றில் சிக்காமல் இருப்பீர்கள் தானே!

No comments:

Post a Comment