Thursday, 11 January 2018

ஏமாற்றினாலும் உத்தமனே


"ஓங்கி உலகளந்த உத்தமன்' என்று விஷ்ணுவைப் போற்றுகிறாள் ஆண்டாள். மூன்றடி மண் யாசகம் கேட்டு குள்ள வடிவில் வந்தார் திருமால். பிறகு விஸ்வரூபம் எடுத்து உலகையே தன் காலால் அளந்து மகாபலியை ஏமாற்றினார். இது உத்தமமான செயல் இல்லையே என்ற சந்தேகம் நமக்கு எழும். இதற்கு பல நூல்களுக்கு உரை எழுதிய பெரியவாச்சான் பிள்ளை விளக்கம் அளித்துள்ளார். அதமம், மத்திமம், உத்தமம் என்று மூன்று குணம் மனிதர்களுக்கு உண்டு. தான் வாழப் பிறரைக் கெடுப்பவன் அதம எண்ணம் கொண்டவன். தானும், பிறரும் நல்வாழ்வு வாழ நினைப்பவன் மத்திம குணம் உடையவன். திட்டினாலும் பொறுத்துக் கொண்டு, ஏணி போல் இருந்து பிறரை ஏற்றி விடுபவனே உத்தமன். குள்ளன், கள்ளன், அக்கிரமக்காரன் என்று மற்றவர்கள் ஏசிய போதும் கோபம் கொள்ளாமல், மகாபலியின் ஆணவத்தைப் போக்கி மோட்சம் வழங்கியதால், மகாவிஷ்ணு உத்தமன் ஆகிறார். எனவே தான் ஆண்டாள் அவரை "ஓங்கி உலகளந்த உத்தமன்' என பாடுகிறாள் என்கிறார்.

No comments:

Post a Comment