Tuesday, 16 January 2018

உலகநாதர் சொல்வதை கேளுங்கள்


அவ்வையார் தன் நூலான கொன்றை வேந்தனில் "ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்றார். இதையே, உலகநீதி என்னும் நூலை எழுதிய உலகநாதர் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்று குறிப்பிட்டார். "நீறில்லா நெற்றியும், ஆறில்லா ஊரும் பாழ்' என்பார்கள். ஊர் என்றாலே ஆற்றில் குளிர்ந்த நீரும், அதன்அருகே இறைவன் கொலு வீற்றிருக்கும் கோவிலும் அமைந்திருக்க வேண்டும். அப்படியானால் தான், கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக அமையும். 

மனிதன் தன் புறத்தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் இவற்றோடு, தனக்குள் இருக்கும் ஆன்மாவையும் கவனிக்க வேண்டியவனாக இருக்கிறான். மற்ற எந்த உயிரினத்துக்கும் மனம், ஆன்மா போன்ற சிந்தனை இல்லை. வெறுமனே உண்டு, உறங்கிப் பொழுதைக் கழிப்பதற்காகவா இந்த பிறவி...!

"நாம் ஏன் பிறந்தோம், எங்கிருந்து வந்தோம், எதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறோம், இவ்வுலகத்தை இயக்குகின்ற சக்தி எது, அது எங்கிருக்கிறது' என்று சிந்திக்க வேண்டும். இப்படியாக நம்மைச் சுற்றியுள்ள விந்தைகளைப் பற்றி எண்ண வேண்டிய கட்டாயம் மனிதப்பிறவிக்கு மட்டுமே இருக்கிறது. இதுபற்றி சிந்தனை செய்வதற்கே மனிதனுக்கு பகுத்தறிவு தரப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment