Monday 8 January 2018

பார்வை இல்லையா அதுவும் நன்மைக்கே


பாண்டவர்களுக்காக கவுரவர்களிடம் தூது சென்றார் கிருஷ்ணர். துரியோதனன், சகுனி நீங்கலான எல்லாரும் அவரை வரவேற்றனர். கவுரவர்களின் தந்தையான திருதராஷ்டிரனுக்கும் கிருஷ்ணரைப் பார்க்க ஆசை. ஆனால், அவர் பார்வை இல்லாதவர் ஆயிற்றே! அவன் கிருஷ்ணனிடம், "கிருஷ்ணா! உன்னைப் பார்க்க கண் இல்லாத பாவியாக நான் இருக்கிறேனே,'' என்று வருந்தினார்.

உடனே கிருஷ்ணர்,"திருதராஷ்டிரரே! உமக்கு பார்வை இல்லாதது கூட நன்மைக்கே. ஏனென்றால், எல்லாரும் சபையில் கூடியிருந்த போது கவுரவர்கள், ஒரு பெண் என்று கூட பார்க்காமல் திரவுபதியின் வஸ்திரத்தை இழுத்து அவமதித்தனர். பார்வை இருந்திருந்தால் அந்த கொடுமையை பார்க்க நேர்ந்திருக்குமே!'' என்று பதிலளித்தார். 

ஆனாலும், கருணைக்கடலான அவர் அப்போதே திருதராஷ்டிரனுக்கு விசேஷமான கண்பார்வை அளித்து, தன்னுடைய விஸ்வரூபத்தை காட்டினார். எரியும் நெருப்பை தொட்டால் தான் சுடும். ஆனால், தீமை என்னும் தீயைப் பார்த்தாலே சுடும் என்பதை இந்த நிகழ்வின் மூலம் கிருஷ்ணர் உலகுக்கு உணர்த்துகிறார்.

No comments:

Post a Comment