Friday 5 January 2018

புரியும்... ஆனா புரியாது


வாழ்க்கை இன்பமானது என்று மற்றவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், இது மாயை என்கிறார் சங்கரர். அவரால் பாடப்பட்ட பஜகோவிந்தம் என்ற நூலின் முதல் ஸ்லோகத்தில் "பஜகோவிந்தம் பஜகோவிந்தம் பஜகோவிந்தம் மூடமதே' என்று குறிப்பிடுகிறார். "ஏ! மதிகெட்ட மனமே! கோவிந்தனை விட்டால் உனக்கு வேறு கதியில்லை. அவன் திருநாமத்தைப் பாடு' என்பது இதன் பொருள். கல்வி, செல்வம், புகழ் ஆகியவற்றால் வரும் இன்பம் நிலையானது அல்ல. கண்ணனின் திருவடியே நிலைத்த இன்பம் தரவல்லது என்பதை பஜகோவிந்தத்தின் 31 ஸ்லோகங்கள் மூலம் உணர்த்துகிறார். வாழ்க்கை நிலையானதல்ல என்ற உண்மை எல்லாருக்கும் தெரிந்தாலும், யாரும் அதை ஏற்றுக் கொள்வதில்லை. இதை ஏற்றுக் கொள்ள வைக்கும் தன்மை பஜகோவிந்தத்திற்கு இருப்பதால், இதற்கு "மோக முத்கரம்' என்ற சிறப்பு பெயர் சூட்டியுள்ளனர். "மோகத்தை உடைக்கும் சம்மட்டி' என்பது இதன் பொருள்.

No comments:

Post a Comment