Friday 5 January 2018

ஒரு 'பலாப்பழ' செய்தி


குருவாயூரப்பனின் பக்தரான பூந்தானம் ஒரு கனவு கண்டார். அதில் விஷ்ணு தூதர்கள் அவரை வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்றனர். துவாரபாலகர்கள் அவரை வணங்கினர். திடுக்கிட்ட பூந்தானம், "இது என்ன அநியாயம்? வைகுண்டத்தின் காவலர்களான நீங்கள் என்னை வணங்கலாமா?'' என்றார். "உத்தமரான தங்களை வணங்காமல் இருக்கலாமா? எங்களுக்கு சாபவிமோசனம் தந்தவர் தாங்கள் தான்!'' என்றனர். "அப்படியா?' என்று வியந்தவரிடம்,"சுவாமி! நாங்கள் ஒரு சாபத்தின் காரணமாக பலா மரங்களாக பிறக்க நேர்ந்தது. தங்கள் சொற்பொழிவில் பக்திக்கதைகளை தினமும் கேட்டதன் பயனாக மீண்டும் வைகுண்டத்திற்கு திரும்பும் பாக்கியம் அடைந்து விட்டோம்'' என்று சொல்லி பெருமாளிடம் அவரை அழைத்துச் சென்றனர். பெருமாளை அவர் தரிசிக்கவும், கனவு கலையவும் சரியாக இருந்தது. அப்போது பெரும் சத்தத்துடன் வாசலில் நின்ற இரண்டு பலாமரங்களும் சாய்ந்தன. தன் வீட்டு வாசலில் துவார பாலகர்களே பலாமரங்களாக நின்றதும், அவர்கள் வைகுண்டம் எழுந்தருளியதால் மரங்கள் சாய்ந்ததையும் பூந்தானம் புரிந்து கொண்டார். உடல் சிலிர்க்க குருவாயூரப்பனை வணங்கினார்.

No comments:

Post a Comment