கல்லால மரத்தடியில் அமர்ந்து சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்னும் முனிவர்களுக்கு வேத ஆகமங்களை உபதேசம் செய்பவர் தட்சிணாமூர்த்தி. இவர் பேசாமலே பாடம் நடத்தும் ஆசிரியர். மவுனமே இவரது மொழி. எனவே தான் திருப்புகழில் இவரை "ஊமைத்தேவர்' என அருணகிரிநாதர் குறிப்பிடுகிறார். மவுனத்தில் மூன்று வகை உண்டு. உடம்பை அசைக்காமல் கட்டை போல இருப்பது "காஷ்ட மவுனம்'. பத்மாசனத்தில் அமர்ந்து, தியானத்தில் ஆழ்ந்தால் இந்த மவுனநிலையை அடையலாம். அடுத்தது "வாக் மவுனம்'. இதற்கு "மவுனவிரதம்' என்று பொருள். மூன்றாவது நிலை மனோமவுனம். மனதை அலைபாய விடாமல் தடுத்து, கடவுளுடன் ஒன்ற வைப்பது இது. மவுனமாக இருக்கும் போது தான் மனசாட்சியின் குரலை நம்மால் கேட்க முடியும்.
Monday, 15 January 2018
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment