கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சேரும் புனிதத்தலம் திரிவேணி சங்கமம். இங்கு நீராடினால் பாவம் தீரும் என்பது ஐதீகம். கோரக்கும்பர் என்ற மகான், திரிவேணி சங்கமத்திற்குச் சென்ற பக்தர்களிடம் பாகற்காய் ஒன்றைக் கொடுத்து, "எனக்காக இதனைப் புனித நீராட்டுங்கள்' என வேண்டிக் கொண்டார். அவர்களும் அதை தண்ணீரில் நனைத்து வந்தனர். அதைப் பெற்ற கோரக்கும்பர் அதைப் பல துண்டாக நறுக்கி, ஆளுக்கு ஒன்றாக சாப்பிடக் கொடுத்தார். பாகற்காய் கசக்கும் என்பதால் அவர்கள் சாப்பிடவில்லை. "புனித தீர்த்தங்களில் நீராடினாலும் பாகற்காய் இனிக்காது. அதுபோல் தான் உங்கள் நிலையும்! '' என்றார் அவர். வெறும் தீர்த்த நீராடலால் பாவம் போகாது. மனமாற்றம் ஒன்றே பாவத்தைப் போக்கும் சக்தியுள்ளது என்பதை இந்த செயல் மூலம் அவர் உலகுக்கு உணர்த்தினார்.
Monday, 15 January 2018
புனித தீர்த்தத்தினால் நீராடினால் பாவம் போகுமா ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment