Wednesday 4 October 2017

பாதாள விநாயகர்


உயரமான இடத்தில் மலைமீது விநாயகர் இருப்பது போலவே, சில தலங்களில் பாதாளத்திலும் அருள்புரிகிறார். காளஹஸ்தி காளத்தீஸ்வரர் கோயில் ராகுகேது பரிகாரத்தலமாகத் திகழ்கிறது. இங்கு 35 அடி ஆழத்தில் அமர்ந்திருக்கும் "பாதாளவிநாயகர்' தனி சந்நிதியில் வீற்றிருக்கிறார். வளைந்து நெளிந்து குறுகலான படிகளில் இறங்கிச் சென்றால் இவரைத் தரிசிக்கலாம். இவர் அருகே நீர் சுரந்து கொண்டே இருக்கும். கோயிலருகே பொன்முகலி ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது. இதே போன்று, சிவத்தலமான விருத்தாசலம் பழமறைநாதர் கோயிலில் 18அடி ஆழத்தில் இவருக்கு சந்நிதி உள்ளது. அதனால், இவருக்கு ஆழத்து விநாயகர் என்றே பெயர். இவருக்கென்று தனி கொடிமரமும், திருவிழாவும் நடத்துவது சிறப்பு.

No comments:

Post a Comment