Wednesday 4 October 2017

மாதம் இருமுறை வரும் ஏகாதசி?


15நாட்களுக்கு ஒருமுறை சுழற்சிமுறையில் வரும் ஒருநாளை குறிப்பது ஏகாதசி ஆகும். இந்தநாட்கள் பொதுவாக திதி என்றும் அழைக்கப்படுகிறது. ஏகாதச எனும் வடமொழிச்சொல் பதினொன்று எனப்பொருள்படும். அமாவாசை மற்றும் பவுர்ணமியில் இருந்து 11வதுநாள்திதி ஏகாதசி ஆகும். 30நாட்களைக் கொண்ட சந்திரமாதத்தில் அமாவாசைக்கு அடுத்தநாள்முதல் பவுர்ணமிவரை சுக்கிலபட்சம் என்றும் பவுர்ணமிக்கு அடுத்தநாள் முதல் அமாவாசை வரை கிருஷ்ணபட்சம் என்றழைக்கப்படுகிறது. அமாவாசைக்கு அடுத்துவரும் ஏகதாசியைச் சுக்கிலபட்ச ஏகாதசி என்றும் பவுர்ணமியை அடுத்த வரும் ஏகாதசியைகிருஷ்ணபட்சஏகாதசி என்றும் அழைப்பர். மாதத்திற்கு 2வீதம் ஆண்டிற்கு 24ஏகாதசிகள் உண்டு. 

புரட்டாசியில் வரும் கிருஷ்ணபட்ச ஏகாதசியில்தான் அரிச்சந்திரன் விரதம் இருந்தநாள். அன்று விரதம் இருந்தால் இழந்ததைப் பெற முடியும். அதே போல் புரட்டாசி சுக்லபட்சஏகாதசியில்  விரதம் இருப்பதின் மூலம் பஞ்சம்நீங்கும் என்பதும் ஐதீகம். மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி வைகுண்ட ஏகாதசி எனப்படுகிறது. ஏகாதசிகளில் இது சிறப்பு பெற்றதாக கருதப்படுகிறது. இந்நாளில் விரதம் இருந்து வழிபாடுகளை மேற்கொண்டால் இப்பிறவியில் நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு பெறுவதோடு, மறுபிறவியில் வைகுண்டவாசம் கிடைப்பதாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன. தேவர்களின் துன்பங்களைப் போக்கியதால் வைகுண்டஏகாதசிக்கு முக்கோடி ஏகாதசி என்ற பெயரும் உண்டு. ஏகாதசி அன்று பகல்உறக்கம் இன்றி விரதம் இருந்து வழிபடுவது வழக்கம்.

No comments:

Post a Comment