மயிலாடுதுறை அருகிலுள்ள கடலங்குடியில் கச்சபுரீஸ்வரராக சிவன் அருள்பாலிக்கிறார். தேவாசுரர்களின் தந்தையான கஷ்யப மகரிஷி காஞ்சிபுரத்தில் பிரதிஷ்டை செய்த கச்சபுரீஸ்வரருக்கு இணையாக இவர் கருதப்படுகிறார். பழங்காலத்தில் சதுர்வேதி மங்கலம் என இத்தலம் வழங்கப்பட்டது. முதலாம் பராந்தகச் சோழனால் கட்டப்பட்டது. கால வெள்ளத்தில் சிதிலமடைந்த இக்கோயிலில், மூலவர், நந்தி மட்டுமே மிஞ்சினர். இதையடுத்து கோயிலில் திருப்பணி தொடங்கியது. அம்மன், பரிவாரமூர்த்திகள் நிர்மாணிக்கப்பட்டனர். சக்தி தலங்களில் அசாம் காமாக்கியா கோயில் புகழ்பெற்றது. அங்குள்ள அம்பிகையான காமேஸ்வரி கடலங்குடியிலும் அருள்பாலிக்கிறாள். விநாயகர், முருகன், நடராஜர், துர்க்கை, ராகு, கேது பரிவார மூர்த்திகளாக இருக்கின்றனர். ஜன.30ல் இங்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. போன்: 98400 53289.
Wednesday, 18 October 2017
தெற்கே ஒரு "காமாக்கியா'
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment