Wednesday, 18 October 2017

மஞ்சள் குங்குமத்துடன் நீடுழி வாழ்க!


தீர்க்க சுமங்கலியாக வாழவும், சிறந்த வாழ்க்கைத் துணை அமையவும் சோமவார விரதம் அனுஷ்டிக்கலாம். ஒவ்வொரு திங்களும் இவ்விரதம் மேற்கொள்ள வேண்டும் இதை அனுஷ்டிப்பவர்கள் காலை, இரவில் பால், பழம், மதியம் மட்டும் பச்சரிசி சாதம் சாப்பிடலாம். மாலையில் சிவாலய தரிசனம் செய்ய வேண்டும். சிவனுக்கு வில்வார்ச்சனை, விளக்கேற்றுதல் ஆகிய வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும். இந்த விரதம் மேற்கொண்ட வசிஷ்டர், கற்புக்கரசி அருந்ததியை மனைவியாகப் பெறும் பாக்கியம் பெற்றார். சீமந்தினி என்பவளுக்கு மாங்கல்ய தோஷம் இருந்தது. இதுபற்றி, யாக்ஞவல்கிய ரிஷியின் மனைவி மைத்ரேயியிடம் சொல்லி வருந்தினாள். மைத்ரேயி, அவளுக்கு சோமவார மகிமையை உணர்த்தினாள். சீமந்தினியும் விரதம் மேற்கொண்டு மஞ்சள் குங்குமத்துடன் நீடுழி வாழும் வரம் பெற்றாள். 

No comments:

Post a Comment