Thursday 12 October 2017

கங்கையுடன் சம்பந்தமுள்ள மூவர்


பகவான் விஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மகாபலியை ஆட்கொள்வதற்காக உலகத்தை அளந்தார். அவர் தன் பாதத்தை மேல் லோகத்துக்கு தூக்கியவுடன், பிரம்மா அந்த பாதங்களுக்கு தன் கமண்டல நீரால் அபிஷேகம் செய்தார். அது ஆகாய கங்கையாக ஓடியது. அது அப்படியே பூமியில் விழுந்தால் உலகம் தாங்காது என்பதால், சிவபெருமான் தன் தலையில் அந்நீரைத் தாங்கி "கங்காதரன்' என்ற பெயர் பெற்றார். பின்னர், பகீரதனின் கோரிக்கைக்கு இணங்கி பூமிக்கு வந்தது கங்கை. எனவே, சிவனின் தலையில் இருந்தாலும், பூமிக்கு வந்தாலும் அதன் பெயர் கங்கை தான். வீட்டில் நீர் எடுத்து கும்பத்தில் வைத்து, நூல் சுற்றி மந்திரங்களை ஜெபித்தால், அந்நீரிலும் கங்கை ஆவாஹனம் ஆகிவிடும். எனவே, விஷ்ணுவுக்கும், சிவபெருமானுக்கும் உரியதாக கங்காதீர்த்தம் அமைந்துள்ளது. ஆக, பிரம்மா,விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் தொடர்புள்ள புனிதநீர் கங்கையில் தீபாவளிநாளில் ஸ்நானம் செய்கிறோம். 

No comments:

Post a Comment