Thursday 12 October 2017

முதல்பாடல் இவருக்குத்தான்


"வயலூர் இருக்க அயலூரைத் தேடி அலைவானேன்?' என்பது பழமொழி. வள்ளல் போல் பன்னிரண்டு கைகளால் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள்புரியும் ஆறுமுகன் வாழும் ஊர் வயலூர். திருவண்ணாமலை கோபுரத்தில் இருந்து கீழே விழுந்த அருணகிரிநாதரைத் தன் கைகளில் தாங்கிய முருகன் "வயலூருக்கு வா' என்று அழைத்தார். இங்கு தான் "முத்தைத்தரு பத்தித்திருநகை' என்று திருப்புகழுக்கு முதலடி எடுத்துக் கொடுத்தார். பதினெட்டுப் பாடல்களை அருணகிரிநாதர் இங்கு பாடினார். பிறதலங்களில் இருக்கும் முருகனுக்கு வேண்டிய நேர்த்திக் கடன்களை வயலூர் முருகனுக்கு நிறைவேற்றலாம். வாரியார் சுவாமிகள் வயலூர் முருகன் மீது மிகுந்த பக்தி கொண்டவர். வயலூர் சென்று வள்ளி மணாளனை வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும்.

No comments:

Post a Comment