Thursday, 19 October 2017

தூங்காத கண் இங்கு ஒன்று...


கங்கைக் கரையில் வாழ்ந்தவன் குகன். ராமபக்தியில் சிறந்த அவன், ராம லட்சுமணரைக் கண்டு ஓடோடி வந்தான். ராமன், அவனைத் தன் நெஞ்சோடு அணைத்து மகிழ்ந்தார். ராமலட்சுமணர், சீதை மூவருக்கும் பழங்களைத் தந்துஉபசரித்தான். ""காட்டிற்குச் செல்வதை விட, 14 ஆண்டுகளும் கங்கைக்கரையிலேயே இருந்து விட்டால் எங்களுக்கு மகிழ்ச்சி. உங்களுக்குத் தேவையான அனைத்தையும் நாங்கள் செய்து தருகிறோம்,'' என்றான். 

அன்று இரவில் ராமர், சீதை இருவரும் தூங்கும்போது, லட்சுமணன் மட்டும் தூங்கவில்லை. அதைக் கண்ட குகன், ""ஐயனே! நீங்கள்நிம்மதியாக உறங்குங்கள். இவ்விடத்தில் விலங்கோ, திருடரோ யாரும் உங்களை அணுக முடியாது. வேண்டுமானால், நான் கூட காவலாக விழித்திருக்கிறேன்,'' என்றான். லட்சுமணன் அவனிடம், ""இங்கு பயம்ஏதுமில்லை என்பதை நான் அறிவேன். ஆனால், ஆளப்பிறந்த சக்கரவர்த்தி திருமகனே இப்படி தரையில் தூங்கும்படி ஆகிவிட்டதே. இதைக் கண்ட கண்களுக்கு தூக்கம் எப்படி வரும்?'' என்ற வருத்தத்தில் தான் தூக்கம் வர வில்லை,'' என்றான். 

No comments:

Post a Comment