சீதையின் சுயம்வரத்தில் ராமன் சிவதனுசு என்னும் வில்லை ஒடித்து தன் வீரத்தை நிலைநாட்டினார். சீதைக்கு அளவில்லாத மகிழ்ச்சி ஏற்பட்டது.
இக்ஷ்வாகு குலத்தில் பிறந்த ராமருக்கும், நிமி வம்சத்தில் பிறந்த சீதைக்கும் பெரியோர்கள் மணநாள் குறித்தனர். அப்போது ஜனகருக்கு ஒரு யோசனை உதித்தது. லட்சுமணனையும், தன் மருமகனாக்கிக் கொள்ள எண்ணினார். தன் மகள் ஊர்மிளாவை மணமுடித்துக் கொடுப்பது என முடிவு செய்து வசிஷ்டமுனிவரிடம் தெரிவித்தார். வசிஷ்டருக்கு, இன்னும் பிரமாதமான யோசனை தோன்றியது. ""ஜனகரே! தங்களின் தம்பி குசத்வஜனின் மகள்களான மாண்டவி, சுருதகீர்த்தியை பரதன், சத்ருக்கனருக்கு மணமுடித்து கொடுக்கலாம்,'' என்றார். ஜனகருக்கு அளவில்லாத மகிழ்ச்சி. மிதிலை நகரமே அலங்கரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் நான்கு திருமணமும் சிறப்பாக நடந்தது.
ரகுவம்சத்தில் உதித்த இவர்களின் திருமணத்தைக்காணசூரியபகவானே நேரில் வந்து விட்டார். மண்ணுலகம் மட்டுமில்லாமல் விண்ணுலகமும் போற்றும் வகையில் நான்கு திருமணங்களும் நடந்தன.
No comments:
Post a Comment