Friday 13 October 2017

சாபம் தீர்த்த அம்பிகை


ராஜஸ்தான் புஷ்கரத்தில் ஐந்துமுகங்களும், பத்து கைகளும் கொண்டு "காயத்ரி' என்னும் பெயரில் அம்பாள் காட்சி தருகிறாள். கவுதம முனிவரின் மனைவியான அகலிகையை விரும்பிய பாவத்தால், இந்திரனுக்கு சாபம் ஏற்பட்டது. அதைப் போக்க பிரம்மனை நோக்கி தவத்தில் ஆழ்ந்தான். பிரம்மா காட்சியளித்து, தனது கமண்டல நீரால் ஒரு குளத்தை ஏற்படுத்தினார். அக்குளத்திற்கு "புஷ்கரம்' என்று பெயரிட்டார். அதில் நீராடி காயத்ரி தேவியை வணங்கி பாவவிமோசனம் பெற அருள்செய்தார். காயத்ரி அருள் செய்ததால் இத்தலத்திற்கு "காயத்ரிபீடம்' என்று பெயர். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கு நடைபெறும் புஷ்கரவிழா பிரசித்தி பெற்றதாகும்.

No comments:

Post a Comment