Friday 13 October 2017

மூன்றடுக்கு கோயில்


வைத்தீஸ்வரன் கோயில் அருகிலுள்ள தலைஞாயிறு கோயிலை "திருக்கருப்பறியலூர் சிவாலயம்' என்பர். கொகுடி என்னும் முல்லைக்கொடி, தல விருட்சமாக இருப்பதால் "கொகுடிக்கோயில்' என்றும் பெயருண்டு. இங்குள்ள சிவன் இந்திரனின் குற்றம் பொறுத்த காரணத்தால் "குற்றம் பொறுத்த நாதர்' எனப்படுகிறார். மூன்றடுக்கு கோயிலான இதன், முதல் அடுக்கில் பார்வதி, பரமேஸ்வரரையும், அதன் மேல் சட்டநாதரையும் தரிசிக்கலாம். சீர்காழி தோணியப்பர் கோயிலிலும் இதே போன்றஅமைப்பு உண்டு. சீர்காழிக்கு மேற்கிலுள்ள இவ்வூரை "மேலைக்காழி' என்பர். இங்குள்ள கோல்வளை அம்பாளை வழிபடுபவர்களுக்கு மீண்டும் கருவில் வந்து பிறக்கும் நிலை ஏற்படாது (பிறப்பற்ற நிலை கிடைக்கும்) என்பது ஐதீகம். 

No comments:

Post a Comment