Monday 16 October 2017

திருவெள்ளறை செண்பகவல்லித் தாயார்


மகாலட்சுமியின் கடாட்சம் இந்தத் தலத்தில் பொலிவதால், இந்த பூமி முழுவதுமே தாயாருக்குதான் சொந்தம்! அதனால்தான் வீதி உலா செல்லும்போது முதலில் இந்த செண்பகவல்லித் தாயார் செல்ல, பெருமாள் அவளைப் பின்தொடர்ந்து செல்கிறார். அதேபோல கோயிலுக்குத் திரும்பும்போதும் தாயார் முதலில் வந்து கோயிலுக்குள் புக, எம்பெருமான் தொடர்கிறார். இதே ஆலயத்தில் ராமானுஜர் பல்லாண்டு காலம் தங்கியிருந்து அருட் சேவை புரிந்திருக்கிறார். தான் உண்ட அமுதை ராமானுஜனுக்கும் கொடுக்கச் சொல்லி, தாயாரிடம் சொல்ல, அதன்படி தாயாரும் அளித்து ராமானுஜரின் தினப்பசியை ஆற்றியிருக்கிறார். 

இதே நடைமுறை இன்றளவும் ஒரு சம்பிரதாயமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. இப்படிப் பசியறிந்து உணவிடும் தாய்மை உணர்வு கொண்ட செண்பகவல்லித் தாயாரைத் தொழுவோருக்குக் குறை ஒன்றும் இல்லை என்பது அனுபவபூர்வமான உண்மை. இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, தாயாரை உளமாற வணங்கி, கோயில் பிரசாதத்தை உட்கொண்டால், தடைகள் விலகி ஓட, விரைவில் திருமணம் முடியும்; புத்திர பாக்கிய ஏக்கமும் நிவர்த்தியாகும் என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள், பக்தர்கள். திருச்சி துறையூர் பாதையில் 20 கி.மீ. தொலைவில் உள்ளது.  கோயில் தொடர்புக்கு: 04312562246; 04312670314; 9443183618.

No comments:

Post a Comment