Monday 16 October 2017

சங்கு, சக்கர முருகன்


தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் பண்டாரவாடை அருகே தேவராயன்பேட்டை என்ற ஊரில் பழமையான சிவன் கோயில் உள்ளது. சிவன் பெயர் மச்சபுரீஸ்வரர். அம்பாள் பெயர் சுகந்த குந்தளாம்பிகை. 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில். இது மீன ராசிக்கு உரிய கோயில். மாணவர்கள் கல்வி பட்டம் பெற இக்கோயிலை வந்து வணங்கிச் செல்கின்றனர். இக்கோயிலின் பிராகாரத்தில் அதிசய தோற்றமாக சங்கு சக்கரத்துடன் ஆறுமுகர் வள்ளிதெய்வானையுடன் வீற்றிருந்து அருட்பாலிக்கிறார். 

சங்கும் சக்கரமும் உள்ள முருகனை வழிபடுவதன் மூலம், வாழ்வில்  காலமுழுதும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தமிழ்நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் வந்து சங்குசக்கர முருகனை வழிபட்டுச்செல்கின்றனர். இக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான உதவி மற்றும் வசதிகளை இறைப்பணி மன்றத்தினர் செய்து தருகின்றனர்.

No comments:

Post a Comment