Saturday 14 October 2017

பொய் தான்.. ஆனா, உண்மை


நீங்கள் காசிக்கு போய் கங்கையில் நீராடி விட்டு வந்ததாகக் கூட பொய் சொல்லலாம். காசி விஸ்வநாதரின் கருணாகடாட்சம் கிடைத்து விடும். "காசி' என்று பெயர் சொன்னீர்களே! அதற்குரிய பலன் கிடைத்து விடும். ஆனால், "ஸ்ரீசைலம் போய் மல்லிகார்ஜுனரை தரிசனம் செய்துவிட்டு வந்தேன்' என்று மட்டும் பொய் சொல்லாதீர்கள். ஏனெனில், பிள்ளையார் இங்கே அப்படி ஒரு வரம் வாங்கி வந்திருக்கிறார். ஸ்ரீசைலத்தில் இருந்து 5 கி.மீ., தூரத்தில் சாட்சி கணபதி கோயில் இருக்கிறது. இங்குள்ள கணபதி மற்ற கணபதிகளைப் போல் இல்லாமல், கையில் ஏடும், எழுத்தாணியும் வைத்துள்ளார்.

""தந்தையே! பக்தர்கள் நீங்கள் குடியிருக்கும் தலங்களுக்கு போய் விட்டு வந்ததாக சொன்னால் கூட, அந்த ஊரின் பெயரைச் சொன்னதற்காக நீங்கள் பலன் கொடுக்கலாம். ஆனால், ஸ்ரீசைலத்துக்கு மட்டும் யார் வந்து செல்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே அருள் செய்ய வேண்டும். யார் யார் வருகிறார்களோ, அவர்களைப் பற்றிய விபரத்தை தருவது எனது வேலை,'' என்று சொல்லி ஏடும், எழுத்தாணியுடனும் கைலாயத்தில் இருந்து கிளம்பி வந்து இங்கே குடியிருக்கிறார். இந்த கணபதியின் சிலை பெரிதாக இருக்கும். ஸ்ரீசைலம் செல்பவர்கள், இந்த கணபதி கோயிலில் அவசியம் ஆஜராகி விடுங்கள். 

No comments:

Post a Comment