Saturday 7 October 2017

திருமலையை பூமிக்கு கொண்டு வந்தவர்


ஒருமுறை வால்கில்யர் என்னும் மகரிஷியைத் தேவேந்திரன் கேலி செய்தான். அவனது கர்வத்தை அடக்க ஒருவனை உருவாக்கும் வகையில் அவர் வேள்வி செய்தார். அவ்வேள்வியின் பயனாக கஷ்யபருக்கு கருடன் பிறந்தார். அவரது தாய் வினதையின் பெயரைக் குறிப்பிடும் விதத்தில் "வைநதேயன்' என்றும் இவரை அழைப்பர். கருடனின் வலிமையைக் கண்ட மகாவிஷ்ணு, தன்னுடைய வாகனமாகவும், கொடியாகவும் ஏற்றுக் கொண்டார். ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து திருமலையை (திருப்பதி) பூலோகத்திற்குக் கொண்டு வந்த பெருமை கருடனையே சேரும். துவாரகை மன்னனான கண்ணன், புத்திரபேறுக்காக உபமன்யு முனிவரிடம் தீட்சை பெற்று தவமிருந்தார். அப்போது துவாரகா புரியைக் காக்கும் பணிக்கு கருடனையே நியமித்தார். ஒருமுறை பாற்கடலில் உள்ள சுவேதத்தீவில் இருந்த பால் கட்டிகளை, தன் பிடரியில் சுமந்து வந்தான் கருடன். அவை பூலோகத்தில் சிதறின. அவையே சுவேத மிருத்திகையாக (நாமம் இடும் திருமண்) மாறியதாகச் சொல்வர்.

No comments:

Post a Comment