Thursday, 19 October 2017

பெண் பெயரில் ஆண் தெய்வம்


பிராஹ்மி, வைஷ்ணவி போன்ற பெண் தெய்வங்களின் வரிசையில் வைநாயகி என்ற பெயர் இடம்பெற்றுள்ளதாக பிரகத் சம்ஹிதா என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பெயர் பெண் வடிவ விநாயகரைக் குறிப்பதாகும். சக்திகணபதி, விக்னேஷ்வரி, கணேசினி, கஜானனா, ஜங்கினி, கணேஸ்வரி ஆகிய பெயர்களும் வைநாயகிக்கு உண்டு. பவுத்த வழிபாட்டில் "கணபதி ஹிருதயா' என்று இவளைக் குறிப்பிடுவர். மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருச்செந்தூர், பவானி, திருக்குறுங்குடி, சுசீந்திரம் கோயில் தூண்களில் இச் சிற்பம் காணப்படுகிறது. புலிக்காலுடன் கூடிய வியாக்ரபாத விநாயகியைச் சிதம்பரத்தில் தரிசிக்கலாம். 

No comments:

Post a Comment