Wednesday, 18 October 2017

ஏழுமலையானுக்கே சொந்தம்


உண்டியலில் காணிக்கை செலுத்த, பக்தர்கள் வரிசையில் நிற்பதை திருப்பதியில் தான் பார்க்க முடியும். இங்குள்ள உண்டியல் மற்ற கோயில்களைப் போல, இரும்புப்பெட்டியாக இல்லை. அகலமான வாய் கொண்ட பெரிய பித்தளை பானையை (கலய வடிவம்) துணியில் சுற்றி தள்ளுவண்டியில் வைத்திருப்பர். நிறைந்ததும் வண்டியை இழுத்து விட்டு, அடுத்த வண்டியை உள்ளே தள்ளி விடுவர். பணம் தவிர, திருமாங்கல்யம், தங்க, வெள்ளிக் கட்டிகள், வெள்ளியால் செய்த மனித உறுப்புகள், நகைகள், நவரத்தினங்கள் என பலவும் இடம்பெறும். உண்டியல் பணம், பிரகாரத்தில் உள்ள "பரகாமணி' என்னும் அறையில் உடனடியாக எண்ணப்படுகிறது. அப்போது தரிசனம் முடித்து வரும் பக்தர் ஒருவரை சாட்சியாக வைத்துக் கொள்வர். இப்படி வருபவர் வேட்டி மட்டும் உடுத்தியிருக்க வேண்டும். தங்க, வெள்ளி ஆபரணமோ, பணமோ மறந்து போய் கொண்டு சென்று விட்டால் அப்பொருள் ஏழுமலையானுக்@க சொந்தமாகி விடும் என்ற விதிமுறை பின்பற்றப்படுகிறது. 

No comments:

Post a Comment