Thursday 19 October 2017

பையாவான ஐயா


திருமாலின் அவதாரங்களில் ராமாவதாரம் மிகவும் உயர்ந்தது. மற்ற அவதாரங்களில் திருமால் தன்னை தெய்வத்தின் அம்சமாக காட்டிக் கொண்டார். ஆனால், ராமாவதாரத்தில், மனிதனாக வாழ்ந்து காட்டினார். தந்தை கொடுத்த வாக்குக்காக 14 ஆண்டுகள் காட்டிற்குச் சென்றார். பிள்ளையின் பிரிவைத் தாங்க முடியாமல் தசரதர் உயிர் துறந்தார். மேலுலகத்திற்கு தசரதரின் உயிர் சென்றது. அங்கே தேவர்கள் ஒன்று கூடி வரவேற்றனர். அவர் செல்லும் வழியெல்லாம் கைகாட்டிய படி அவரவர் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். 

""நமக்குப் பரம்பொருளாக இருப்பவர் மகாவிஷ்ணு. அவரைக்கண்டதும், "ஐயா! ஐயா!' என்று சொல்லி நாம் வணங்குவோம். ஆனால், இவர் மட்டும் தான் அவரை, "பையா! பையா!' என்று உரிமையுடன் அழைத்தார். இவர் பெற்ற பாக்கியம் நமக்கு கிடைக்குமா? சக்கரவர்த்தியாக இருந்ததை விட, ராமரின் தந்தையாக இருந்ததில் தான் தசரதருக்குப் பெருமை அதிகம்,'' என்றனர். 

No comments:

Post a Comment