Saturday 6 January 2018

இழந்த அழகை மீண்டும் பெற


தஞ்சாவூர் அருகிலுள்ள சிவத்தலம் "அவளிவள் நல்லூர்'. இந்த ஊரில் ஆதிசைவ அந்தணர் ஒருவர் இருந்தார். அவருக்கு இரண்டு மகள்கள். மூத்தவளைத் திருமணம் செய்த மருமகன், காசியாத்திரை சென்றிருந்தார். அந்த சமயத்தில், அந்தப் பெண்ணுக்கு அம்மை நோயால், கண் பார்வை போய், உருவமும் மாறி விட்டது. காசியிலிருந்து திரும்பிய மருமகன்,"இவள் என் மனைவியல்ல; இளையவளே மனைவி,'' என வாதிட்டான். மனம் கலங்கிய அந்தணர் சிவனிடம் முறையிட்டு அழுதார். 

இறைவன் நேரில் தோன்றி மூத்தவளைக் காட்டி, "அவள் தான் இவள்' என சாட்சி சொன்னார். அதனால், "சாட்சி நாதர்' என பெயர் பெற்றார். பிறகு அந்தப் பெண், தை அமாவாசை நாளில் இங்குள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி சாட்சிநாதர் அருளால் மேனியழகும், கண்பார்வையும் பெற்றாள். தை அமாவாசையன்று இங்கு திருவிழா நடக்கிறது. சாட்சி சொன்ன சிவன், மூலவருக்கு பின்புறம் ரிஷப வாகனத்தில் உள்ளார். இழந்த அழகைத் திரும்பப் பெற விரும்புவோர் சாட்சிநாதரை வழிபட்டால் பலன் கிடைக்கும். 

No comments:

Post a Comment