Sunday 7 January 2018

பூஜைக்கேற்ற பூவிது

Image result for ஊமத்தம்பூ

சிவபெருமானுக்கு "உன்மத்த சேகரன்' என்று ஒரு பெயர் இருக்கிறது. "உன்மத்தம்' என்றால் "ஊமத்தம்பூ' . "ஊமத்தம்பூ மீது விருப்பம் கொண்டவன்' என்று பொருள். எருக்கு, தும்பை ஆகிய பூக்களும் அவருக்கு பிடிக்கும். அப்பைய தீட்சிதர் என்ற மகான், பைத்தியம் பிடித்த நிலையிலும், சிவன் மீது 50 ஸ்லோகம் கொண்ட ஸ்தோத்திரத்தைப் பாடினார். அதற்கு "உன்மத்த பஞ்சாசத்' என்று பெயர். அதில், ""சிவபெருமானே! உன் கருணையை என்னவென்று சொல்வேன். எளிதாக கிடைப்பதும், மக்களால் பயன்படுத்தாததுமான ஊமத்தை, தும்பை, எருக்கு ஆகிய மலர்களை ஏற்றுக்கொண்டு எங்களுக்கு மோட்சத்தை வழங்குகிறாயே,'' என போற்றியுள்ளார். 

விலையே இல்லாத இந்த மலர்களை யாரும் கண்டு கொள்வதில்லை. ஆனால், கடவுளுக்கு எளிமையே பிடிக்கும் என்பதை உணர்த்தும் விதமாக இந்த ஸ்லோகம் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment