கிரகங்களில் ஒன்றான கேது, விஷ்ணுவைச் சரணடைந்ததால் நவக்கிரகப்பதவி அடைந்தார். ஸ்வர்பானு என்ற அசுரனே பின்னாளில் தவமிருந்து கேதுவாக மாறினார். ஞானம், மோட்சம் ஆகியவற்றுக்கு காரணமான இவரை "ஞானகாரகர்' "மோட்சகாரகர்' என்று குறிப்பிடுவர். கேது பலமுள்ள ஜாதகர்கள், ஆன்மிக சிந்தனையும், பக்தியும் கொண்டவர்களாக விளங்குவர்.
அந்தஸ்து மிக்க பதவியில் இருந்தாலும் எளிமையாகவும், நேர்மையாகவும் இருப்பர். ஜாதகத்தில் கேது பலவீனமாக இருந்தால் ஒழுக்கக் குறைவு, தீயோர் நட்பு உண்டாகும் என்பர். கேது தோஷம் நீங்க விநாயகர், சித்ரகுப்தர் ஆகியோரை வணங்குவது நன்மையளிக்கும்.
No comments:
Post a Comment