Sunday 7 January 2018

அதிகாரியே தேவையில்லை


காளஹஸ்தியில் புகழ்பெற்ற சிவாலயம் இருக்கிறது. அந்தக் கோயிலை அகத்தியர் கட்டியதாக வரலாறு. பிருகு முனிவர், அவருக்கு உதவி செய்துள்ளார். கோயில் கட்டும் பணியாளர்கள், தினமும் கூலிக்காக, அவர்கள் தங்கியிருக்கும் ஆற்றங்கரைக்கு வருவார்கள். அப்போது, அகத்தியர் முன்னிலையில், அவர்கள் மடியில் ஆற்று மணல் கொட்டப்படும். ஒருவர், எந்தளவு உழைத்திருக்கிறாரோ, அந்தளவுக்கு அது தங்கக்காசுகளாக மாறிவிடும். ஏமாற்றி கூலி பெற முயன்றால், மணல் மணலாகவே இருக்கும். இதனால், "அவனுக்கு அதிக கூலி, இவனுக்கு குறைந்த கூலி' என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போனது.

ஒரு கோயில் கட்டும் போது, ""ஆண்டவன் நம்மையே பார்த்துக் கொண்டிருக்கிறான், நாம் ஒழுங்காக உழைக்க வேண்டும்,'' என்ற எண்ணம் எப்படி வருகிறதோ, அதேபோல, எங்கு எந்த வேலை செய்தாலும் நம் மனதில் அதே எண்ணம் ஓட வேண்டும். நம் வேலையைச் செய்ய, நமக்கு மேலதிகாரிகள், கண்காணிப்பாளர்கள் என்று யாருமே அழுத்தம் கொடுக்க தேவையில்லை. அவர்களுக்கு பயந்து மனமின்றி, ஏனோ தானோவென செய்யும் வேலைக்கு சரியான கூலி கிடைக்காது. நம் வேலையை, நாமே சரியாகச் செய்து விட்டால், ஆண்டவன் நிச்சயம் நல்ல கூலி கொடுப்பான். இதை மனதில் கொண்டு உண்மையாக உழையுங்கள்.

No comments:

Post a Comment